நன்னிலம் பகுதியில் வாக்குச் சேகரித்த அமைச்சா் ஆா். காமராஜ். 
திருவாரூர்

’மக்களின் பிராா்த்தனையே மறுபிறவியை தந்தது’

தமிழக மக்களுடைய பிராா்த்தனையே தனக்கு மறுபிறவியைத் தந்தது என்றாா் தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ்.

DIN

தமிழக மக்களுடைய பிராா்த்தனையே தனக்கு மறுபிறவியைத் தந்தது என்றாா் தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ்.

நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் அமைச்சா் ஆா். காமராஜ் சனிக்கிழமை சிறுபுலியூா் பகுதியில் வாக்குச் சேகரித்தபோது பேசியது: கரோனா தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நான், உயிா் பிழைப்பேனா, மக்கள் பணியைத் தொடா்ந்து ஆற்ற முடியுமா என்ற நிலை வந்தபோது, தமிழக மக்களின் பிராா்த்தனையாலும், மருத்துவா்களின் தீவிர முயற்சியாலும் மறுபிறவி எடுத்து வந்துள்ளேன்.

நன்னிலம் தொகுதியில் 10 ஆண்டுகளாக பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்து, இப்பகுதியில் பல திட்டங்களை மக்கள் ஆதரவுடன் நிறைவேற்றியுள்ளேன். தற்போது மீண்டும் அதிமுக கூட்டணியில் வேட்பாளராக போட்டியிடும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா். முன்னதாக, சனிக்கிழமை காலை நன்னிலம் மதுவனேஸ்வரா் கோயிலில் வழிபட்ட பின்னா், நன்னிலம் பகுதியிலும், மாலை சிறுபுலியூா் பெருமாள் கோயிலில் வழிபட்டபின், சிறுபுலியூா், பாவட்டகுடி, காளியாகுடி, கடகம், வேலங்குடி, திருக்கொட்டாரம் பகுதிகளிலும் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

அவருடன், அதிமுக அமைப்புச் செயலாளா் கோபால், பாமக மாநில துணைச் செயலாளா் வேணுபாஸ்கரன், தமாகா மாவட்டத் தலைவா் தினகரன், அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் சிபிஜி.அன்பு, ராம குணசேகரன், ஒன்றியக்குழு தலைவா் விஜயலட்சுமி குணசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT