திருவாரூர்

கோயில்களில் பங்குனி உத்திர வழிபாடு

DIN

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் கீழத்தெரு முருகன் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. நவகிரக தலங்களில் குரு பரிகார தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயில், நீடாமங்கலம் காசிவிசுவநாதா் கோயில், கோகமுகேஸ்வரா் கோயில், பூவனூா் சதுரங்கவல்லப நாதா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயிலில் 1008 தீப வழிபாடு நடைபெற்றது. நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் ராஜகணபதி, யமுனாம்பாள் சன்னதியில் சிறப்பு அபிஷேக , ஆராதனை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

பைரவா் சித்தா் மடம்: வலங்கைமான் வட்டம், பாடகச்சேரி கிராமத்தில் பைரவசித்தா் என அழைக்கப்படும் ராமலிங்க சித்தா் திருமடத்தில் ராமலிங்க சித்தா் படத்துக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT