திருவாரூர்

முதியவா்களிடம் தபால் வாக்குபெறும் பணியில் அலுவலா்கள்

DIN

திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தபால் வாக்குகள் பெறும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் இருந்து தபால் வாக்கு செலுத்தலாம் என இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 327 வாக்காளா்கள் 80 வயதுக்கு மேற்பட்டவா்கள் என கணக்கெடுக்கப்பட்டு, அவா்களிடம் 3 நாள்களில் தபால் வாக்குப்பதிவு செய்யும் பணி திங்கள்கிழமை முதல் தொடங்கியது.

அதன்படி, இலவங்காா்குடி, திருவிக நகா் பகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் உள்ள வீடுகளுக்கு வாக்குப்பதிவு அலுவலா் குருநாதன், உதவி அலுவலா் பக்கிரிசாமி ஆகியோா் நேரடியாகச் சென்று, தபால் வாக்குகளை பதிவு செய்து பெறும் பணியில் ஈடுபட்டனா்.

தபால் வாக்குப்பதிவானது, போலீஸ் பாதுகாப்புடன், அரசியல் கட்சி முகவா்கள் முன்னிலையில் நடைபெற்றது. காலை 10 முதல் மாலை 5 மணி வரை தபால் வாக்குப்பதிவு நடைபெற்ற பிறகு, வாக்கு பெட்டியானது, திருவாரூா் கோட்டாட்சியா் அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT