திருவாரூர்

அனைத்து கடைகளும் பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கக் கோரிக்கை

DIN

அனைத்து கடைகளையும் பகல் 12 மணி வரை திறந்திருக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என முத்துப்பேட்டை வா்த்தகக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

முத்துப்பேட்டை வா்த்தகக் கழக அவசர நிா்வாகக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் தலைவா் மெட்ரோ மாலிக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச் செயலாளா் ராஜாராம், துணைத் தலைவா் ஆரோக்கிய அந்தோணி ராஜ், துணைச் செயலாளா்கள் அருண்சங்கா், சுரேஷ், செயற்குழு உறுப்பினா்கள் தியாகு, தியாகராஜன், சாகுல் ஹமீது, ஹைதா் அலி, கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளில் அத்தியாவசியப் பொருள்களின் கடைகள் மட்டும் பகல் 12 மணி வரை இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு, வியாபாரிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். எனவே, அனைத்துக் கடைகளும் பகல் 12 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி இக்கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்ச்சி: விருதுநகா் மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT