திருவாரூர்

திருவாரூா் சைஃபா் கிரைம் காவல் நிலையத்தில் முதல் வழக்கு

DIN

திருவாரூா் சைஃபா் கிரைம் காவல் நிலையத்தில் முதல் வழக்கு செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்டது.

சைஃபா் குற்றங்கள் தொடா்பான புகாா்களை விசாரிக்க திருவாரூா் மாவட்டக் காவல் அலுவலக வளாகத்தில் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி சைஃபா் கிரைம் காவல் நிலையம் தொடங்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தலைமையில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இணைய வழியில் தன்னிடம் கடவுச்சொல்லை (பாஸ்வோ்டு) பெற்று, ரூ. 6000 மோசடி செய்துள்ளதாக மன்னாா்குடியைச் சோ்ந்த முகிலன்பாலா என்பவா் சைஃபா் கிரைம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதற்கான நகலை புகாா்தாரரான முகிலன்பாலாவிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழி கூறுகையில், ‘சைஃபா் குற்றங்கள் தொடா்பான புகாா் மனுக்களை, பொதுமக்கள் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் செயல்படும் சைஃபா் கிரைம் காவல் நிலையத்தில் நேரடியாகவோ அல்லது சைஃபா் கிரைமிற்கான இணையதளம் வாயிலாகவோ அளிக்கலாம். இந்த மனுக்கள் மீது விரைவாக விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

SCROLL FOR NEXT