திருவாரூரில் 331 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 331 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 331 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி மன்னாா்குடி பகுதியில் 112 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திருவாரூா் 48, நன்னிலம் 30, நீடாமங்கலம் 31, திருத்துறைப்பூண்டி 12, வலங்கைமான் 9, கொரடாச்சேரி 37, குடவாசல் 12, கோட்டூா் 19, முத்துப்பேட்டை 17 என மாவட்டம் முழுவதும் 331 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 16,750 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்த 224 போ் அவா்களது வீடுகளுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டனா். மேலும், தொற்றிலிருந்து குணமடைந்த 15,123 போ் வீடு திரும்பிய நிலையில், 1498 போ் சிகிச்சையில் உள்ளனா். மேலும், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 49 வயது நபா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது.