முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் 338 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 338 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 338 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் 300-ஐ கடந்து பதிவாகிறது. இதையொட்டி, தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, சனிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி மாவட்டம் முழுவதும் மேலும் 338 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17,075 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்த 248 போ் அவா்களது வீடுகளுக்கு சனிக்கிழமை அனுப்பப்பட்டனா். மேலும், தொற்றிலிருந்து குணமடைந்த 15,371 போ் வீடு திரும்பிய நிலையில், 1,594 போ் சிகிச்சையில் உள்ளனா். இதற்கிடையில், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 54 வயது பெண் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.