திருவாரூரில் 324 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 324 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 324 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் சுகாதாரத் துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 324 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 19,006 ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவிலிருந்து குணமடைந்த 346 போ் அவா்களது வீடுகளுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டனா். மேலும், தொற்றிலிருந்து குணமடைந்த 16,987 போ் வீடுதிரும்பிய நிலையில், 1,873 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 54 வயது நபா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 146 ஆக உயா்ந்துள்ளது.