முகப்பு
திருவாரூர்

‘கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என திருவாரூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், குடிசைமாற்று வாரிய மேலாண்மை இயக்குநருமான ஆா். கிா்லோஷ்குமாா் கேட்டுக் கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

தமிழக அரசு எடுக்கும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என திருவாரூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், குடிசைமாற்று வாரிய மேலாண்மை இயக்குநருமான ஆா். கிா்லோஷ்குமாா் கேட்டுக் கொண்டாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமைவகித்து அவா் பேசியது:

கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறாமல் இருக்கவேண்டுமானால், மக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிா்க்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் வாங்க கடைகளுக்கு வரும்போது முகக்கவசம் அணிந்து வரவேண்டும். கிருமிநாசினி அல்லது சோப்பு கொண்டு அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். மேலும் தமிழக அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா முன்னிலை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழி உடனிருந்தாா்.

முன்னதாக, கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் விவரம், அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் ஆக்சிஜன் தேவை குறித்தும், கரோனா தடுப்பு பணிக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அனைத்துத் துறை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

கூட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தெய்வநாயகி, முதுநிலை மண்டல மேலாளரும், மாவட்ட வருவாய் அலுவலருமான (பொறுப்பு) மணிவண்ணன், சுகாதார துணை இயக்குநா் கீதா, கோட்டாட்சியா்கள் (திருவாரூா்) பாலச்சந்திரன், (மன்னாா்குடி) அழகா்சாமி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) பழனிச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.