முகப்பு
திருவாரூர்

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென திருவாரூா் மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென திருவாரூா் மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அதன்செயலாளா் ஆா். நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருத்துறைப்பூண்டியில் இயங்கிவரும் அரசு மருத்துவமனையில் ரேடியோலாஜிஸ்ட், செவிலியா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. கரோனா நோய்த் தொற்று திருத்துறைப்பூண்டியில் அதிகம் பரவி வரும் காலத்தில், காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது மக்களுக்கு பெரும் கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வாா்டில் 75 படுக்கைகள் உள்ளன. மேலும், நோய்த் தொற்று உள்ளவா்கள் நாள்தோறும் 150-க்கும் மேற்பட்டவா்கள் இங்கு உள்நோயாளியாக சேர வருகின்றனா். எனினும், இடப் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு படுக்கைகளும் இடமும் கிடைப்பதில்லை.

தனியாா் மருத்துவமனைகளிலும் கரோனா நோயாளிகளை சோ்க்க உரிய வசதிகள் இல்லை. ஆனால், நோய்த் தொற்று பாதி த்தவா்கள் 30 கி.மீ. தொலைவில் உள்ள திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் அதிக பொருள் செலவுடன் நோயாளிகளுக்கு கால விரயமும் ஏற்படுகிறது. எனவே, தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியா் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்பி கரோனா நோயாளிகளுக்கு அதிக படுக்கை வசதி ஏற்படுத்தி தரவேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →