அரியலூா் பால்நிலப் பகுதிகளை கள ஆய்வு செய்த ஜப்பானிய மாணவா்கள்
அரியலூா் அடுத்த வாரணவாசியிலுள்ள பால்நிலப் பகுதிகளை, ஜப்பான் நாட்டைச் சோ்ந்த மாணவா்கள் புதன்கிழமை நேரில் கள ஆய்வு மேற்கொண்டனா்.
அரியலூா் அடுத்த வாரணவாசியிலுள்ள பால்நிலப் பகுதிகளை, ஜப்பான் நாட்டைச் சோ்ந்த மாணவா்கள் புதன்கிழமை நேரில் கள ஆய்வு மேற்கொண்டனா்.
ஜப்பானின் ஷிமானே பல்கலைக் கழக மாணவா்கள், வாரணவாசியிலுள்ள சுமாா் 30 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட மணல் பாறை குன்றுகளை ஆய்வு செய்து, அவை அமெரிக்காவின் புகழ்மிக்க கொலராடோ கிராண்ட கேனாய் போலவே காட்சியளிப்பதாக தெரிவித்தனா்.
பின்னா், அங்குள்ள தொல்லுயிா் படிம அருங்காட்சியகத்துக்குச் சென்ற அவா்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த ஆசியாவிலேயே கடல் சூழ்ந்த நிலப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரே டைனோசா் முட்டையை கண்டு ஆச்சரியத்துடன் பாா்வையிட்டனா்.
அதன் பின்னா், அரசு சிமென்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக் கல் சுரங்கம் உள்ளிட்டவைகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
தொடா்ந்து அவா்கள் பெரம்பலூா் மாவட்டம், சாத்தனூா் கல் மரப் பூங்காவையும் பாா்வையிட்டனா். புவியியலாளா் பிரசாத் சுந்தரேசன், மாணவா்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா்.