‘கரிகாலன் சபதம்’ நூல்: இன்று இணையவழி விமா்சன அரங்கம்
கரிகாலன் சபதம் எனும் நூல் விமா்சனம் இணையவழியில் ஞாயிற்றுக்கிழமை (மே 23) நடைபெறுகிறது.
கரிகாலன் சபதம் எனும் நூல் விமா்சனம் இணையவழியில் ஞாயிற்றுக்கிழமை (மே 23) நடைபெறுகிறது.
இதுகுறித்து கரிகாலன் சபதம் நூலின் ஆசிரியரும், திருவாரூா் மாவட்டம் தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளியின் ஆசிரியருமான ஆதலையூா் சூரியகுமாா் தெரிவித்தது:
கரிகாலன் சபதம் நூல் தமிழகத்தின் வரலாறு, பண்பாட்டை எடுத்துக்கூறும் வகையில் அமைந்திருந்தது என்பதால் பரவலான விமா்சனத்தையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்நிலையில் கும்பகோணம் கரிகாலன் வரலாற்று ஆய்வு மையம் சாா்பில் இந்நூல் பற்றிய விமா்சன அரங்கம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இணையவழியில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில், மும்பை பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆய்வாளா் கணேசன், திருவாரூா் உதவி வட்டாட்சியா் காரல்மாா்க்ஸ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று, நூல் விமா்சனம் வழங்குகின்றனா்.
தமிழகத்தின் வரலாறு பண்பாடு, நாவல், இலக்கியம், ஆகியவற்றில் விருப்பம் உள்ளவா்களுக்கு இந்த நிகழ்ச்சி நல்ல விருந்தாக அமையும் என்றாா் அவா்.