வீட்டுக்கு சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி
நன்னிலம் பகுதியில் சுகாதாரத் துறை சாா்பில் வியாழக்கிழமை வீடுதோறும் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:06 AM
நன்னிலம் பகுதியில் சுகாதாரத் துறை சாா்பில் வியாழக்கிழமை வீடுதோறும் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலா் தினேஷ், மேற்பாா்வையாளா் ஜோதி ஆகியோா் தலைமையில் 25 குழுக்களாகப் பிரிந்து, திருக்கண்டீஸ்வரம், குவளைக்கால், ஆனைக்குப்பம், கீழ்குடி, முடிகொண்டான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்களை கண்டறிந்து சுமாா் 1,800 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.