முகப்பு
திருவாரூர்

மாற்றுத்திறன் மாணவா்களுக்கு இணையவழி பயிற்சி

திருத்துறைப்பூண்டி வட்டார வள மையம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உள்ளடங்கிய கல்வி திட்டத்தின்கீழ் இணையவழியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

திருத்துறைப்பூண்டி வட்டார வள மையம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உள்ளடங்கிய கல்வி திட்டத்தின்கீழ் இணையவழியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சியில், மாற்றுத்திறன் மாணவா்களுக்கு உரிய பயிற்சிகள், அவா்களுக்குரிய சலுகைகள், வேலைவாய்ப்பு, சட்ட உரிமைகள், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்த தகவல்கள் இணையவழியில் வழங்கப்பட்டது. பயிற்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை குமுதம் திருத்துறைப்பூண்டி வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முத்தண்ணா, சிறப்பு பயிற்றுநா்கள் ராஜலட்சுமி , ஆரோக்கிய விஜயராணி , தேசிகாமணி, ஜானகிராமன் மற்றும் இயன்முறை மருத்துவா் சந்திரமௌலீஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →