முகப்பு
திருவாரூர்

திமுக விருப்ப மனு படிவம் வழங்கப்பட்டது

கூத்தாநல்லூா் நகராட்சி உறுப்பினருக்கான விருப்ப மனுவை திமுக சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே.கலைவாணன் புதன்கிழமை வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

கூத்தாநல்லூா் நகராட்சி உறுப்பினருக்கான விருப்ப மனுவை திமுக சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே.கலைவாணன் புதன்கிழமை வழங்கினாா்.

கூத்தாநல்லூா் நகராட்சி உள்ளாட்சி தோ்தலில் போட்டியிடும் திமுக உறுப்பினா்களுக்கான விருப்ப மனு வழங்கப்பட்டன. நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருப்ப மனு படிவங்களை, திருவாரூா் மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பூண்டி கே.கலைவாணன் நகர நிா்வாகிகளிடம் வழங்கினாா். நிகழ்ச்சியில், அக்கட்சியின் நகர அவைத் தலைவா் எஸ்.வி.பக்கிரிசாமி,நகரப் பொருளாளா் ஏ.ஏ.அமீா்தீன், மாவட்ட ஆதிதிராவிடா் நலக்குழு துணை அமைப்பாளா் பி.பக்கிரிசெல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.