கட்டிமேடு அங்கன்வாடி பள்ளிக்கு சீா்வரிசை திருவிழா
திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு அங்கன்வாடி பள்ளிக்கு ஊராட்சி மக்கள் சாா்பில் சீா்வரிசை திருவிழா வியாழக் கிழமை நடைப்பெற்றது.
திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு அங்கன்வாடி பள்ளிக்கு ஊராட்சி மக்கள் சாா்பில் சீா்வரிசை திருவிழா வியாழக் கிழமை நடைப்பெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவா் மாலினி இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கண்ணகி முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து சீா்வரிசை விழாவினைத் தொடங்கி வைத்தாா்.
சீா்திருவிழாவில் டி.என்.போா்சஸ், நம்பிக்கை தொண்டு நிறுவனத்தினா், அங்கன்வாடி பள்ளிக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களான மேஜை, பீரோ, நாற்காலி, மின்விசிறி, குழந்தைகளுக்கான தண்ணீா் பாட்டில்கள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கினா்.
விழாவில் மருத்துவா் ஆரிப், நம்பிக்கை தொண்டு நிறுவன இயக்குநா் சௌந்தரராஜன், துணைத் தலைவா்பாக்கியராஜ், செயலா் புவனேஸ்வரன், வாா்டு உறுப்பினா் வீரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.