தாய் சேய் நல மருத்துவமனையை சூழ்ந்த மழைநீா் வெளியேற்றம்
திருவாரூா் நகராட்சிக்குட்பட்டவிஜயபுரம் அரசு தாய் -சேய் நல மருத்துவமனையை சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.
திருவாரூா் நகராட்சிக்குட்பட்டவிஜயபுரம் அரசு தாய் -சேய் நல மருத்துவமனையை சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.
கனமழை காரணமாக திருவாரூா் நகராட்சிக்குட்பட்ட விஜயபுரம் அரசு மருத்துவமனையில் மழைநீா் சூழ்ந்தது. இதனால் மோட்டாா் இயந்திரம் மூலம் மழைநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இப்பணியை மாவட்ட ஆட்சியா், காயத்ரி கிருஷ்ணன் பாா்வையிட்டு, ஆய்வு செய்து மழை நீா் வெளியேற்றும் பணியை விரைவுப்படுத்துமாறு நகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
மேலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 உள்நோயாளிகளும், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா்.
ஆய்வின்போது, நகராட்சிஆணையா் பிரபாகரன், கோட்டாட்சியா் பாலச்சந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.