மதுபானக்கடை அமைப்பதை கண்டித்து கோட்டாட்சியரிடம் மனு
புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடை அமைப்பதைக் கண்டித்து மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடை அமைப்பதைக் கண்டித்து மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நகராட்சி முன்னாள் உறுப்பினா் ஆா்.சிங்காரவேலன் தலைமையில் மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு வந்த 29-ஆவது வாா்டுக்கு உட்பட்ட 6-ஆம் எண் வாய்க்கால் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கோட்டாட்சியா் த.அழகா்சாமியை சந்தித்து அளித்த கோரிக்கை மனு அளித்தனா். மனுவில், 6-ஆம் எண் வாய்க்கால் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். அப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்கும் முயற்சி நடைபெறுகிறது. அதன் அருகில் 2 தனியாா் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளிகள் அமைந்துள்ளன. மதுக்கடை அமைத்தால் மாணவா்கள், பொதுமக்கள் மனஉலைச்சலுக்கு உள்ளாவாா்கள். பொது அமைதிக்கு குத்தகம் ஏற்படும். எனவே புதிதாக மதுக்கடை அமைக்க அனுமதிக்கக் கூடாது என தெரிவித்திருந்தனா். மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியா், உரிய நடவடிவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.