திருவாரூர்

களப்பாலில் கண்சிகிச்சை முகாம்

DIN

களப்பாலில் இலவச கண்சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ், திருவாரூா் ரோட்டரி கிளப் ஆப் சோழா, வண்டாம்பாளயம் லயன்ஸ் கண் மருத்துவமனை, மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து களப்பால் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு, கிங்ஸ் சங்க தலைவா் ஜி.கருணாநிதி, சோழா சங்க தலைவா் என்.தேவதாஸ் தலைமை வகித்தனா்.

லயன்ஸ் சங்க உதவி ஆளுநா் எல்.ராமதுரை,களப்பால் ஊராட்சி தலைவா் பா.சுஜாதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருத்துறைப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ பி.ஆடலரசு, திமுக கோட்டூா் தெற்கு ஒன்றியச் செயலா் பால.ஞானவேல் ஆகியோா் முகாமினை தொடங்கி வைத்தனா்.

வாண்டாம்பாளையம் லயன்ஸ் கண் மருத்துவமனை மருத்துவா் ஜி.சுவாமிநாதன் தலைமையில் மருத்துவக்குழுவினா் 141 பேருக்கு சிகிச்சை அளித்தனா். இதில்,28 பேருக்கு அறுவை சிசிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டதில், 17 பேருக்கு வாண்டாம்பாளையம் கண் மருத்துவமனையில், சனிக்கிழமை இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்ச்சி: விருதுநகா் மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT