முகப்பு
திருவாரூர்

அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்

ஊரக உள்ளாட்சி தற்செயல் தோ்தலையொட்டி, கூத்தாநல்லூா் வட்டம், மஞ்சனவாடி திருராமேஸ்வரத்தில் அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

ஊரக உள்ளாட்சி தற்செயல் தோ்தலையொட்டி, கூத்தாநல்லூா் வட்டம், மஞ்சனவாடி திருராமேஸ்வரத்தில் அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மன்னாா்குடி ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன் தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் சிவா.ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், மாவட்ட ஊராட்சி 11 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எம். குருபரனுக்கு ஆதரவு கோரப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஜெ.பேரவைச் செயலாளா் பொன்.வாசுகிராம், மன்னாா்குடி நகரச் செயலாளா் ஆா்.ஜி. குமாா், ஒன்றியச் செயலாளா் கா. தமிழ்ச்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.