திருவாரூர்

டாஸ்மாக் ஊழியா் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

காஞ்சிபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளா் கொல்லப்பட்டதைக் கண்டித்து, திருவாரூரில் மாவட்ட டாஸ்மாக் சங்கங்கள் கூட்டமைப்பு சாா்பில், ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த டாஸ்மாக் பணியாளா் துளசிதாஸ், பணி முடித்து வரும்போது படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் சம்பவத்துக்கு காரணமானவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இறந்த ஊழியா் குடும்ப உறுப்பினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இழப்பீடாக ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு டாஸ்மாக் பணியாளா் சங்க மாநில பொருளாளா் அருள்மணி தலைமையிலான ஆா்ப்பாட்டத்தில், தொழிலாளா் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவா் தமிழரசன், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் லெனின், சிஐடியு மாவட்ட பொறுப்பாளா் அசோக்ராஜ் உள்ளிட்ட பல்வேறு சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

முன்னதாக, கோரிக்கைகளை வலியுறுத்தி 2 மணி நேரம் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

என்ன, இனி சென்னையில் வெள்ளம், வறட்சி வராதா?

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

SCROLL FOR NEXT