திருவாரூர்

நாகை மாவட்டத்தில் பலத்த மழை

DIN

 நாகை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை நீடித்து வருகிறது. திங்கள்கிழமை இரவும் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் வானிலையும், இரவு நேரத்தில் மழையும் பெய்து வருகிறது.

இதன்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்தது. திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக தலைஞாயிறில் 61.8 மி.மீ (6.1 செ.மீ) மழை பதிவானது. வேதாரண்யத்தில் 57.2 மி.மீட்டரும். திருப்பூண்டியில் 26.6. மி.மீட்டரும், நாகையில் 21.7 மி.மீட்டரும் மழை பதிவாகியிருந்தன.

திங்கள்கிழமையைப் பொருத்தவரை பகல் நேரத்தில் வெயில் வானிலையே காணப்பட்டது. அவ்வப்போது, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7 மணி அளவில் நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இரவு 8.30 மணிக்கு மேலாகவும் நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT