கூத்தாநல்லூர் : மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் பள்ளியில் ஆயுதபூஜை வழிபாடு
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளியில், ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது.
கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளியில், ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது.
கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட மேலப்பனங்காட்டாங்குடி தமிழர் தெரு மற்றும் குடிதாங்கிச்சேரி உள்ளிட்ட இரண்டு இடங்களில், தமிழக அரசின் அங்கீகாரத்துடன் மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் சிறப்புப் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளியில், 6 வயது முதல் 14 வரை பனங்காட்டாங்குடி, 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் குடிதாங்கிச்சேரி என இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியின் நிர்வாகியும், அரசுப் பள்ளி ஆசிரியையுமான மகேஸ்வரி முருகையன் ஆலோசனையின் பேரில், பள்ளியின் நிறுவனரும், மேட்டுப்பாளையம் லயன்ஸ் சங்கத் தலைவருமான ப.முருகையன் ஏற்பாட்டின் படி, ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.
குடிதாங்கிச்சேரி பள்ளியில், மன வளர்ச்சிக் குன்றிய மாணவர்கள் முன்னிலையில், சர்க்கரைப் பொங்கல், சுண்டல், அவல், பொறி உள்ளிட்டவைகளை வைது சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
தொடர்ந்து, பிரசாதங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. பூஜை ஏற்பாடுகளை, பயிற்சியாளர்கள் அனுராதா, சுரேஷ், செளமியா, மேலாளர் வினோத் உள்ளிட்டவர்கள் கவனித்தனர்.