முகப்பு
திருவாரூர்

மன்னார்குடி அருகே ஊராட்சித் தலைவரைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

ஊராட்சி குளம் ஏலம் விடுவது தொடர்பாக ஊராட்சித் தலைவரின் தன்னிச்சையான போக்கினைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:23 AM
கோட்டூரில் சாலை மறியலில் ஈடுபடும் நெரிஞ்சனக்குடி ஊராட்சி பொது நல கமிட்டியினர்.
பகிர்:

ஊராட்சி குளம் ஏலம் விடுவது தொடர்பாக ஊராட்சித் தலைவரின் தன்னிச்சையான போக்கினைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நெருஞ்சினக்குடி ஊராட்சியில் கிராமத்திற்கு சொந்தமான ஐந்து குளங்கள் உள்ளன. இதனை கிராம கமிட்டியினர் நிர்வகித்து வந்தனர். இந்நிலையில், இந்த ஐந்து குளங்களையும் ஊராட்சிக்கு சொந்தமானதாக்கும் முயற்சியினை ஊராட்சி தலைவர் கு.செங்கொடி முயற்சித்து வந்தார். இதனை கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் உரிமை கோரும் வழக்கு நீதிமன்றத்தில் தொடுத்தனர்.

தற்போது இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் எதேச்சதிகார மான போக்குடன் ஐந்து குளங்களையும் ஏலம் விடுவதற்காக அறிவிப்பு செய்தார். இதனை அடுத்து, கிராம கமிட்டியினர் இதுகுறித்து கோட்டூர் ஒன்றிய ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.

இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கப்படாததை அடுத்து ஏதேச்சாதிகாரமான முறையில் கிராமக் குளத்தை ஏலம் விடும் ஊராட்சி தலைவரையும், புகார் மனு அளித்தும் இதுகுறித்து விசாரணை நடத்திடாத கோட்டூர் ஒன்றிய ஆணையரைக் கண்டித்தும், கிராம பொது நல கமிட்டியினர், ஊராட்சி முன்னாள் தலைவர் என்.எம்.சுண்டுகசுந்தரம் தலைமையில் 100க்கு மேற்பட்டவர்கள் திங்கட்கிழமை கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து சாலை 10 மணி முதல் தடைபட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →