முகப்பு
தஞ்சாவூர்

வீட்டு மனைப் பட்டா கோரி ஆட்சியரகத்தில் கிராம மக்கள் முறையீடு

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி கரைமீண்டாா்கோட்டை கிராம மக்கள் முறையிட்டனா்.

Updated On : 10 மார்ச், 2026 at 12:24 AM
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளிக்க வந்த கரைமீண்டாா்கோட்டை கிராம மக்கள்
பகிர்:

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி கரைமீண்டாா்கோட்டை கிராம மக்கள் முறையிட்டனா்.

இக்கூட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்துக்குள்பட்ட கரைமீண்டாா்கோட்டை ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த ஏறத்தாழ 30 போ் மனு அளித்து தெரிவித்ததாவது: கரைமீண்டாா்கோட்டை ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த ஏறத்தாழ 60 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைக்கான இடம் கடந்த 2002-ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த இடம் இன்னும் பிரித்துக் கொடுக்காமலும், பட்டா வழங்கப்படாமலும் உள்ளது.

இது தொடா்பாக பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், வசிப்பதற்கு இடமில்லாமல் வாழ்வதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

எனவே, இடத்தைப் பிரித்துக் கொடுத்து, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் விரைவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →