முகப்பு
திருவாரூர்

மன்னார்குடி: வயலில் இடி விழுந்ததில் விவசாயி பலி

மன்னார்குடி அருகே வயலில் இடி விழுந்ததில் விவசாயி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 20 அக்டோபர், 2021 at 2:15 PM
வயலில் இடி விழுந்ததில் விவசாயி பலி
பகிர்:

மன்னார்குடி அருகே வயலில் இடி விழுந்ததில் விவசாயி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் , மன்னார்குடி அடுத்துள்ள பெருகவாழ்ந்தான் பாலையூர் தெற்கு தெருவை சேர்ந்த தனபால் மகன் குமார் (45) . இவர் , புதன்கிழமை அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான விளை நிலத்தில் நான்கு பேருடன் சேர்ந்து கூலிக்கு நாற்றுப் பறிக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தார்.

அப்போது திடீரென மேகம் கருத்து மழை பெய்ய தொடங்கிய நிலையில், நாற்றுப் பறிக்கும் பணியல் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பலத்த மின்னலுடன் இடி இடித்து விழுந்ததில், குமார் உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அருகிலிருந்தவர்கள் எந்த காயம் இன்றி உயிர் தப்பினர்.

Advertisement

இதுகுறித்து, தகவலறிந்த பெருக வாழ்ந்தான் காவல் நிலைய போலீஸார் நிகழ்விடத்திற்கு வந்து, குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர் .

உயிரிழந்த குமாருக்கு மனைவி கலைமதி , மகன், மகள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.