முகப்பு
திருவாரூர்

லாரி ஓட்டுநா் தற்கொலை

திருத்துறைப்பூண்டி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற லாரி ஓட்டுநா் புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

திருத்துறைப்பூண்டி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற லாரி ஓட்டுநா் புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

குறும்பல் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மகன் பாலமுருகன் (30).

இவருக்கு திருமணமாகி 7வயதில் ஒரு மகன் உள்ளாா். இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணை பாலமுருகன் மானபங்கம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, அந்த பெண்ணின் தாயாா் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையறிந்த, பாலமுருகன் காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →