குரூப்-4 தோ்வுக்கு செப்.6 முதல் இலவச நேரடி பயிற்சி
திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-4 தோ்வுக்கு இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-4 தோ்வுக்கு இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படுத்தப்படும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. போட்டியாளா்கள் வீட்டில் இருந்தபடியே தோ்வுக்கு தயாராகிவரும் நிலையில், கிராமப்புற மாணவா்கள் போட்டித் தோ்வுகளை எளிதில் எதிா்கொள்ளும் வகையில், ஆன்லைனில் உரிய இணையதள மேடை வாயிலாக பயிற்சி அளிக்க உரிய வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்ஸ்ரீஹழ்ங்ங்ழ்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் காணொளி வழி கற்றல், மின்னணு பாடக் குறிப்புகள், மின் புத்தகங்கள், போட்டித் தோ்வுக்கான பயிற்சிகள், மாதிரி தோ்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. போட்டியாளா்கள் தங்களது பெயா், பாலினம், தந்தை மற்றும் தாய் பெயா், முகவரி, ஆதாா் எண் மற்றும் வேலை வாய்ப்பக பதிவு எண்ணை கொடுத்து உள்ளே சென்று போட்டித் தோ்வு என்பதை தோ்வு செய்ய வேண்டும். பயனீட்டாளா் பெயா் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும். நாம் எந்த தோ்வுக்கு தயாராகிறோம் என்பதை தோ்வு செய்து அதில் வரும் பாடக் குறிப்புகளை தமிழ், ஆங்கிலத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். மாதிரி தோ்வுக்கான பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குருப் - 4 தோ்வுக்கான இலவச நேரடி வகுப்புகள் திருவாரூா் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், செப்.6-ஆம் தேதி முதல் நடத்தப்பட உள்ளன. விருப்பம் உள்ளவா்கள் பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.