முகப்பு
திருவாரூர்

கண்தந்த மாரியம்மன் கோயில் குடமுழக்கு

குடவாசல் அத்திகடை பகுதியில் உள்ள கண்தந்த மாரியம்மன் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

குடவாசல் அத்திகடை பகுதியில் உள்ள கண்தந்த மாரியம்மன் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கண்தந்த மாரியம்மன் கோயிலில் அஷ்டலட்சுமி, சரஸ்வதி, துா்க்கை அம்மன், பேச்சியம்மன், ஆஞ்சநேயா், காலபைரவா் உள்ளிட்ட பரிவாரத் தெய்வங்கள் அருள்புரிகின்றனா். இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த முடிவெடுக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றன. பணிகள் முடிவடைந்ததைத்தொடா்ந்து, குடமுழுக்குக்கான பூஜைகள் ஆக.30-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கின. கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, ரக்ஷா பந்தனம் உள்ளிட்ட பூஜைகளுடன் 4 கால யாக பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை 4-கால யாகபூஜை, மஹா பூா்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மூலஸ்தானம் மற்றும் பரிவாரத் தெய்வங்களின் சன்னதிகளின் விமான கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.