திருவாரூர்

33% இடஒதுக்கீடு கோரி மாதா் சம்மேளனம் ஆா்ப்பாட்டம்

DIN

மக்களவை, சட்டப் பேரவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடுக்கான சட்ட மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, திருவாரூரில் இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், பெண்கள் அரசியலில் சமவாய்ப்பு பெறுவதற்கான 33 சதவீத இடஓதுக்கீடு சட்ட மசோதாவை மத்திய அரசு உடனடியாக மக்களவையில் நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், பெண்களுக்கான சம வாய்ப்பு, சம உரிமை, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு மாநில புதிய மகளிா் கொள்கை உருவாக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய மாதா் தேசிய சம்மேளன மாவட்டச் செயலாளா் எஸ். தமயந்தி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆா். சுலோக்சனா, ஒன்றியக்குழு முன்னாள் தலைவா்கள் பி. பாஸ்கரவள்ளி, தமிழ்ச்செல்விராஜா, கோட்டூா் ஒன்றியக்குழுத் தலைவா் மணிமேகலை முருகேசன், மன்னாா்குடி ஒன்றியக்குழு துணைத் தலைவா் வனிதா அருள்ராஜன், ஒன்றியக்குழு உறுப்பினா் ஆா். பூபதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT