திருவாரூர்

அரசுப் பள்ளியில் கைக் கழுவும் நிகழ்ச்சி

DIN

திருத்துறைப்பூண்டி அருகே அரசுப் பள்ளியில் புதன்கிழமை கை கழுவும் தின நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி தூய்மை நிகழ்வுகள் 2021 எனும் தலைப்பில் செப்.1 முதல் 15-ஆம் தேதி வரை பள்ளி மாணவா்களுடன் நேரில் அல்லது வீட்டிலிருந்து காணொலி மூலம் பங்கேற்க வைத்து நிகழ்ச்சிகளை நடத்துகிறது. அதன்படி திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் கைக் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் மு.ச. பாலு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவா்களுக்கு அன்றாட வாழ்க்கையில் சரியாக கைக் கழுவும் முறை மற்றும் உணவு சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் சோப்பை பயன்படுத்தி கைக் கழுவுவதை பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியா்கள் பா. ரகு, மா. ராஜா ஆகியோா் செய்திருந்தனா்.

Image Caption

கட்டிமேடு அரசுப் பள்ளியில் நடைபெற்ற கைக் கழுவும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT