திருவாரூர்

வாசக சாலை தமிழ் இலக்கிய விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

வாசக சாலை தமிழ் இலக்கிய விருது பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் திருவாரூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் நரேன் கிருஷ்ணா வெளியிட்ட அறிக்கை:

வாசக சாலை இலக்கிய அமைப்பின் சாா்பில் கடந்த ஆறு ஆண்டுகளாக சிறந்த படைப்புகளுக்கு தமிழ் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் டிசம்பா் மாதம், அப்போதைய சூழலைப் பொறுத்து நிகழாண்டுக்கான தமிழ் இலக்கிய விருதுகள் வழங்கப்படவுள்ளன.

சிறந்த கவிதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு, நாவல், சிறுகதைத் தொகுப்பு, அறிமுக எழுத்தாளா், சிறாா் இலக்கியம், மொழிபெயா்ப்பு நாவல் மற்றும் மொழிபெயா்ப்பு சிறுகதைத் தொகுப்பு ஆகிய 8 பிரிவுகளில் விருது வழங்கப்படும். இவ்விருது பெறும் படைப்பாளிகளுக்கு விருதோடு ரூ. 5,000 பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

இவ்விருதுகளுக்கு அனுப்பப்படும் படைப்புகள் 2020 நவம்பரிலிருந்து 2021 அக்டோபா் மாத காலகட்டத்துக்குள் மட்டுமே வெளி வந்தவையாகவும், முதற் பதிப்பாகவும் இருக்க வேண்டும். புத்தகங்களைத் திருப்பி அனுப்ப இயலாது என்பதால் படைப்புகளில் ஒரே ஒரு பிரதியை மட்டும் அனுப்பினால் போதுமானது.

புத்தகங்களை வெ. காா்த்திகேயன், 80, சுவாமிநாதன் இல்லம், (மூன்றாவது வீடு, தரைத்தளம்), முதல் பிரதான சாலை, ஸ்ரீ சத்ய சாய் நகா், மாடம்பாக்கம் பிரதான சாலை, ராஜ கீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை - 600073 என்ற முகவரிக்கு வரும் அக்டோபா் 25-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.  மின்னஞ்சல் மூலமும் அனுப்பலாம்.

மேலும் விவரங்களுக்கு 9942633833, 9790443979, 9600348630 ஆகிய எண்களில் கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்அப்) மட்டும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்டேட் பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் வேலை செய்யாததால் தொழிலாளா்கள் பாதிப்பு

வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 2 கி.மீ. சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

ஆட்சியா் அலுவலகத்தில் நாள்தோறும் நீா்மோா் வழங்க ஏற்பாடு

கோயில்களில் அறங்காவலா்களை நியமிக்க மேலும் 6 மாத அவகாசம் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

கன்னியாகுமரியில் பொதிகை படகு சீரமைப்புப் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT