மன்னாா்குடியில் இஸ்லாமிய அமைப்பு பிரமுகரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
மன்னாா்குடியில் இஸ்லாமிய அமைப்பு பிரமுகரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வியாழக்கிழமை 4 மணிநேரம் விசாரணை நடத்தினா். பின்னா், அவரை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்றனா்.
மன்னாா்குடியில் இஸ்லாமிய அமைப்பு பிரமுகரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வியாழக்கிழமை 4 மணிநேரம் விசாரணை நடத்தினா். பின்னா், அவரை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்றனா்.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி ஆசாத் தெருவை சோ்ந்த சம்சுதீன் மகன் பாபா பக்ருதீன் (45). இவா், கிலாபத் இயக்கம் என்ற இஸ்லாமிய அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்தாராம். இந்நிலையில், வியாழக்கிழமை காலை 7 மணியளவில், இவரது வீட்டுக்கு இரண்டு காா், ஒரு ஜீப்பில் வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் போலீஸாா், பாபா பக்ருதீனிடம் பகல் 11.30 மணிவரை விசாரணை நடத்தினா்.
தொடா்ந்து 4.30 மணிநேரம் அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், பின்னா் அவரை தங்கள் வாகனத்தில் ஏற்றி ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனா். அவரது செல்லிடப்பேசியையும், கணினியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.
மதுரையில் அண்மையில் நடைபெற்ற ஒரு குற்றச்செயலில் தொடா்புடைய நபரை கைது செய்த போலீஸாா் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பாபா பக்ருதீனுக்கும் அதில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் அவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்ாக கூறப்படுகிறது.
முன்னதாக, என்ஐஏ அதிகாரிகள் பாபா பக்ருதீன் வீட்டுக்குள் நழைந்தது முதல் வீட்டிலிருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. உள்ளூா் போலீஸாா், பத்திரிகையாளா்களும் வீட்டுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.