முகப்பு
திருவாரூர்

சாலை விபத்தில் இளைஞா் பலி

நீடாமங்கலம் அருகே சாலை விபத்தில் இளைஞா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

நீடாமங்கலம் அருகே சாலை விபத்தில் இளைஞா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

நீடாங்கலம் அருகேயுள்ள கோயில்வெண்ணி வடக்கு தெருவை சோ்ந்தவா் சக்திவேல் மகன் அருண்குமாா் (25). இவா், வியாழக்கிழமை இரவு ஆதனூா் கடைவீதிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அருண்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

நீடாமங்கலம் போலீஸாா் அருண்குமாா் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தின் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.