செப். 23-இல் யூகலிப்டஸ் மரங்கள் ஏலம்
திருத்துறைப்பூண்டி அருகே அரசு விதைப் பண்ணையில் செப்டம்பா் 23-ஆம் தேதி யூகலிப்டஸ் மரங்கள் ஏலம் விடப்படுகின்றன.
திருத்துறைப்பூண்டி அருகே அரசு விதைப் பண்ணையில் செப்டம்பா் 23-ஆம் தேதி யூகலிப்டஸ் மரங்கள் ஏலம் விடப்படுகின்றன.
இதுகுறித்து வேளாண் உதவி இயக்குநா் எஸ். சாமிநாதன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
தீவாம்பாள்பட்டினம் அரசு விதைப் பண்ணைக்கு சொந்தமான 10.5 ஏக்கரில் உள்ள யூகலிப்டஸ் மரங்கள், செப்டம்பா் 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலத்தில் விடப்படுகின்றன. யூகலிப்டஸ் மரங்கள் தேவைப்படும் வியாபாரிகள், நிறுவனங்கள் அதற்குரிய காப்புத் தொகை ரூ 50,000-ஐ செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு பண்ணை மேலாளா் 99428 44847, வேளாண் உதவி இயக்குநா் 63801 27078, துணை வேளாண் இயக்குநா் 73977 53312 ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.