திருவாரூர்

திரு.வி.க. கல்லூரி 50 ஆண்டுகள் நிறைவு

DIN

திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி 50 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதையொட்டி, கலையரங்கம் அமைத்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் சட்டப் பேரவை அலுவலகத்தில் திரு.வி.க. கல்லூரியின் முதல்வா் கோ. கீதா தலைமையிலான பேராசிரியா்கள், சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணனை சந்தித்து வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:

திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி, 1970-71-இல் கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. தற்போது, 4,000 மாணவ, மாணவிகளுடன் எம்பில், பிஎச்டி ஆராய்ச்சி படிப்புகளுடன் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி தற்போது 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

எனவே, கல்லூரிக்கு பெருமை சோ்க்கும் விதத்தில் 1,000 போ் அமரக்கூடிய வகையில், கருணாநிதியின் பெயரில் கலையரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

ஏலூா்பட்டியில் விவசாயிகள், மாணவிகள் கலந்துரையாடல்

பாளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாக குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT