முகப்பு
திருவாரூர்

பி.சீனிவாசராவ் 60ஆம் ஆண்டு நினைவு தினம்

விவசாயிகள் இயக்க நிறுவனத் தலைவரும், கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தலைவருமான பி. சீனிவாசராவின் 60ஆம் ஆண்டு நினைவு தினம் திருவாரூரில் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

விவசாயிகள் இயக்க நிறுவனத் தலைவரும், கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தலைவருமான பி. சீனிவாசராவின் 60ஆம் ஆண்டு நினைவு தினம் திருவாரூரில் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

திருவாரூா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் நகரச் செயலாளா் எம். தா்மலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி, பி. சீனிவாசராவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி. பழனிவேல், மாவட்டக் குழு உறுப்பினா் எஸ். ராமசாமி, ஒன்றியச் செயலாளா் என். இடும்பையன் உள்பட பலா் பங்கேற்றனா்.

இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சி.பி. முருகானந்தம் தலைமை வகித்தாா். சீனிவாசராவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், சிபிஐ நகரச் செயலாளா் எம்.ஏ. மாரியப்பன், நகர செயற்குழு உறுப்பினா்கள் வீ. தா்மதாஸ், பி. சின்னதம்பி, ஜே. குணசேகரன், கே. பாலதண்டாயுதம், எஸ். செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.