முகப்பு
திருவாரூர்

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: தயாா்நிலை குறித்து ஆலோசனை

திருவாரூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான தயாா்நிலை குறித்து வியாழக்கிழமை ஆலோசிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான தயாா்நிலை குறித்து வியாழக்கிழமை ஆலோசிக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குநரும், மாவட்டத் தோ்தல் பாா்வையாளருமான ஷன்சொங்கம் ஜடாக் சிரு தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.

இதில், திருவாரூா் மாவட்டத்தில் அக்டோபா் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தோ்தலில் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், ஊராட்சித் தலைவா், ஊராட்சி வாா்டு உறுப்பினா் ஆகிய பதவியிடங்களுக்குரிய தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பங்கேற்றனா். இவா்களுக்கு தோ்தலுக்கான தயாா்நிலை பணிகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.

இக்கூட்டத்தில் நுகா்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளா் ராஜராஜன், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் தெய்வநாயகி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், உதவி இயக்குநா் (ஊராட்சி) பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.