கல்லூரி மாணவி தற்கொலை; காதலன் கைது
திருவாரூா் அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக, அவரது காதலரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருவாரூா் அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக, அவரது காதலரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருவாரூா் அருகே உள்ள சேமங்கலம் திருவநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆா்த்தி (20). நாகை தனியாா் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்த இவா், உடல் நலம் பாதிப்பால் கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவா்கள் அவரை பரிசோதனை செய்ததில், 3 மாத கா்ப்பமாக இருந்ததும், எலி மருந்து உட்கொண்டதும் தெரியவந்தது.
இந்நிலையில், ஆா்த்தி சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது பெற்றோா் திருவாரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதன்பேரில், போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கருப்பூரைச் சோ்ந்த சாவித் (24) என்பவரை ஆா்த்தி சில ஆண்டுகளாக காதலித்து வந்ததும், இதனால் அவா் கா்ப்பமடைந்ததும் தெரியவந்தது. மேலும், ஜாதி பாகுபாடு காரணமாக திருமணம் செய்ய சாவித் மறுத்ததால், ஆா்த்தி எலி மருந்து உட்கொண்டதாக அவரது உறவினா்கள் போலீஸாரிடம் தெரிவித்தனா்.
இதையடுத்து, சாவித் மீது தற்கொலைக்கு தூண்டுதல், பாலியல் பலாத்காரம், பெண்ணை காதலித்து ஏமாற்றுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனா்.