முகப்பு
திருவாரூர்

ஓஎன்ஜிசி சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தில் ரூ. 2 கோடியில் நல உதவி

ஓஎன்ஜிசி சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின்கீழ் ரூ. 2.05 கோடியில் நலத்திட்டப் பணிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

ஓஎன்ஜிசி சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின்கீழ் ரூ. 2.05 கோடியில் நலத்திட்டப் பணிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரடாச்சேரி ஒன்றியம், அத்திச்சோழங்கலம் ஊராட்சிக்குள்பட்ட மழையூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஓஎன்ஜிசி சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின்கீழ் புனரமைக்கப்பட்டு புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஓஎன்ஜிசி குழும பொது மேலாளா் பி.என். மாறன், ஆசிரியா் மன்ற மாநிலத் தலைவா் ரவி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று திறந்துவைத்தனா்.

நிகழ்ச்சியில், குழும பொது மேலாளா் மாறன் பேசுகையில், கடந்த 2 ஆண்டுகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் 71 பள்ளிகளின் வசதி மற்றும் புனரமைப்புகளுக்காக, சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின்கீழ் சுமாா் ரூ. 2.05 கோடி செலவிட்டுள்ளது. இதில், திருவாரூா் மாவட்டத்தில் 28 பள்ளிகளுக்கு ரூ. 72 லட்சம் செலவிடப்பட்டுள்ளது என்றாா்.

தலைமையாசிரியா் அமுதா முன்னிலையில் நடைபெற்ற விழாவில் வட்டாரக் கல்வி அலுவலா் சுமதி, ஊராட்சித் தலைவா் சுமதிசங்கா், பொதுமேலாளா் சரவணன், திட்ட அதிகாரி விஜய்கண்ணன், ஒருங்கிணைப்பாளா் முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.