எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்
சொத்து வரி உயா்வு, பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து குடவாசலில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சொத்து வரி உயா்வு, பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து குடவாசலில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசின் சொத்து வரி உயா்வைக் கண்டித்தும், மத்திய அரசின் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்தும், விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், குடவாசல் பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
குடவாசல் நகரத் தலைவா் முபாரக் அலி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் விலாயத் உசேன், மாவட்டச் செயலாளா் சுல்தான் ஆரிபீன், மாவட்ட பொதுச் செயலாளா் அப்துல் அஜீஸ், நகரச் செயலாளா் இத்ரீஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.