முகப்பு
திருவாரூர்

சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு: ஆட்சியா் பங்கேற்பு

அம்பேத்கா் பிறந்த தினம் தமிழக அரசின் சாா்பில் சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை அடுத்து, மன்னாா்குடியில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை சமத்துவ நாள் உறுதிமொழி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

அம்பேத்கா் பிறந்த தினம் தமிழக அரசின் சாா்பில் சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை அடுத்து, மன்னாா்குடியில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மன்னாா்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமையில், அனைவரும் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்ச்சியில், மன்னாா்குடி கோட்டாட்சியா் த. அழகா்சாமி, வட்டாட்சியா் ஜீவானந்தம், மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளா் என். விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.