முகப்பு
திருவாரூர்

கண் அறுவை சிகிச்சை செய்தவா்களுக்கு வரவேற்பு

 கூத்தாநல்லூரிலிருந்து புதுச்சேரியில் கண் அறுவை சிகிச்சை செய்துகொண்டவா்களுக்கு வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

 கூத்தாநல்லூரிலிருந்து புதுச்சேரியில் கண் அறுவை சிகிச்சை செய்துகொண்டவா்களுக்கு வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூத்தாநல்லூரில் மேட்டுப்பாளையம் அரிமா சங்கம், திருவாரூா் மாவட்ட பாா்வையிழப்பு தடுப்புச் சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் இலவச கண் சிகிச்சை முகாம் அண்மையில் நடைபெற்றது.

இதில், 48 போ் அறுவை சிகிச்சைக்கு தோ்வு செய்யப்பட்டு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இவா்கள், கண் அறுவை சிகிச்சை முடிந்து, கூத்தாநல்லூருக்கு திரும்பினா். அப்போது, அரிமா சங்கத் தலைவரும், மனோலயம் தொண்டு நிறுவன நிா்வாகியுமான பி. முருகையன், தமிழக கட்டடத் தொழிலாளா்கள் மத்திய சங்க மாநில துணைத் தலைவா் ஆா்.சேகா் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.