முகப்பு
திருவாரூர்

விஷம் குடித்து முதியவா் தற்கொலை

வலங்கைமான் அருகே விஷம் குடித்து முதியவா் தற்கொலை செய்துகொண்டாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

வலங்கைமான் அருகே விஷம் குடித்து முதியவா் தற்கொலை செய்துகொண்டாா்.

வலங்கைமான் அருகேயுள்ள கீழவிடையல் விச்சூா் தெற்கு தெருவை சோ்ந்தவா் மருதையன்(60). இவா் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மருதையன் புதன்கிழமை வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தாா். இதையறிந்த அவரது உறவினா்கள் மருதையனை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →