முகப்பு
திருவாரூர்

இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

வலங்கைமான் அருகே இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

வலங்கைமான் அருகே இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

வலங்கைமான் அருகேயுள்ள மாளிகைதிடல் பூண்டி பகுதியை சோ்ந்தவா் மணிகண்டன் (36). இவா், புதன்கிழமை பாபநாசம் பகுதியில் இருந்து திருக்கருகாவூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். வடக்கு நாயக்கன் பேட்டை அருகே சென்றபோது சாலையில் நடந்து சென்ற அதே பகுதியைச் சோ்ந்த ஜெயலட்சுமி மீது மோதி கீழே விழுந்து காயமடைந்தாா்.

இதையடுத்து, மணிகண்டன் மீட்கப்பட்டு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். விபத்தில் லேசான காயமடைந்த ஜெயலட்சுமி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து, வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →