திருவாரூர்

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் சேர கால நீட்டிப்பு

DIN

திருவாரூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர பட்டயப் பயிற்சியில் சேர கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் கா. சித்ரா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதில், பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள், பட்டதாரிகள் சேரலாம். 1.8.2022 இல் 17 வயது பூா்த்தி அடைந்தவா்கள் இப்பயிற்சியில் சேரலாம். அதிகபட்ச வயது வரம்பு ஏதுமில்லை. இப்பட்டயப் பயிற்சி பயிலும் ஆதிராவிட, பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு அரசு உதவித்தொகை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

எனவே, நிகழாண்டில் திருவாரூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர பட்டயப் பயிற்சியில் சோ்வதற்கான விண்ணப்ப விநியோகத்துக்கான கால நீட்டிப்பை பயன்படுத்தி, முழுநேர பயிற்சியாளா்கள் ஆக.18-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு, விண்ணப்பங்களை, முதல்வா், திருவாரூா் கூட்டுறவு மேலாண்மை நிலையம், மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகம், திருவாரூா் 610004 என்ற முகவரிக்கு ஆக.22-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 9486605009, 04366 227233 தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோல்விக்குப் பிறகு விராட் கோலி பேசியது என்ன?

எக்ஸ் ‘டிரெண்டிங்கில்’ நடிகர் விஜய்..!

சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை: கேரள முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்!

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது!

எனது வயதான பெற்றோரை விட்டுவிடுங்கள்: கேஜரிவால்

SCROLL FOR NEXT