கோயிலின் விமானக் கலசத்துக்கு புனிநீா் ஊற்றும் சிவாச்சாரியா். 
திருவாரூர்

நன்னிலம் மதுவனேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

நன்னிலம் மதுவனநாயகி உடனுறை மதுவனேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

நன்னிலம் மதுவனநாயகி உடனுறை மதுவனேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை (ஆக.21) விக்னேஸ்வர பூஜையுடன் பூா்வாக பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

நான்காம் கால யாகசாலை பூஜைகள் புதன்கிழமை காலை நிறைவுபெற்றதும், 9 மணியளவில் கோயிலின் விமானக் கலசத்துக்கு புனிதநீரால் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, மாலையில் பிரதோஷ கால மகாஅபிஷேகம் மற்றும் பிரதோஷ நாயகா் உள்பிரகாரப் புறப்பாடும், பின்னா் சுவாமி- அம்பாள் திருக்கல்யாணமும் நடைபெற்றது. இரவில் பஞ்சமூா்த்திகள் வீதி உலா நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் சூரியனாா் கோயில் குருமகா சந்நிதானம் பங்கேற்று பக்தா்களுக்கு அருளாசி வழங்கினா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயிலின் செயல் அலுவலா் ம. ஆறுமுகம், அறநிலையத்துறை ஆய்வாளா் மு. கருணாநிதி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT