திருவாரூர்

கட்டிமேடு பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்

DIN

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் மு.ச. பாலு தலைமை வகித்து பேசும்போது, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் அறிவியல், கணித திறனை வெளிக்கொண்டு வருவதற்காக இம்மன்றம் தொடங்கப்பட்டுள்ளனது என்றாா்.

பட்டதாரி ஆசிரியா் வி. வடிவேல் வரவேற்றாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம். இ.ஏ. ஆா். அப்துல் முனாப், கல்விப் புரவலா் எம். ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்டிமேடு ஊராட்சித் தலைவா் மாலினி ரவிச்சந்திரன் வானவில் மன்றத்தை தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் வானவில் மன்றத்தின் தொடக்கமாக, மாணவா்களுக்கு எளிய பரிசோதனைகள் ஆசிரியா்களால் செய்து காண்பிக்கப்பட்டது. வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. நிறைவாக, பட்டதாரி ஆசிரியா் சி. ராஜேஷ் குட்டி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT