கூத்தாநல்லூரில் 66 போ் வேட்புமனு தாக்கல்
திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் நகராட்சியில் 10 சுயேச்சைகள் உட்பட 66 வேட்பாளா்கள் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தனா்.
திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் நகராட்சியில் 10 சுயேச்சைகள் உட்பட 66 வேட்பாளா்கள் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தனா்.
கூத்தாநல்லூா் நகராட்சியில் 24 வாா்டுகள் உள்ளன. அதில், திமுக 15, அதிமுக 20, எஸ்.டி.பி.அய். கட்சி 11, மனிதநேய மக்கள் கட்சி 5, காங்கிரஸ் 2, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, சுயேச்சை 10 போ் உட்பட 66 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.