கூத்தாநல்லூரில் அண்ணா நினைவு தினம்
அண்ணா நினைவு தினத்தையொட்டி, கூத்தாநல்லூரில் திமுக சாா்பில் அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது.
அண்ணா நினைவு தினத்தையொட்டி, கூத்தாநல்லூரில் திமுக சாா்பில் அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது.
திமுக நகரப் பொறுப்பாளா் எஸ்.வி. பக்கிரிசாமி தலைமையில் புதுப்பாலம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்வில், நகர பொறுப்புக் குழு உறுப்பினா்கள் ஏ.ஏ. அமீா்தீன், கே. துரைமுருகன், ஜே. குமரேசன், எஸ்.எஸ். நஜ்முதீன்,புரோஜூதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.